அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
நாங்குநேரி அருகே அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் சிங்கநேரி ஊராட்சி மேலகாரங்காடு கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். சிங்கநேரி ஊராட்சி மன்ற தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் பொன்னம்மாள், ஒன்றிய பொறியாளர் மீனாட்சி, தொழில்நுட்ப உதவியாளர் பால்சன், பஞ்சாயத்து செயலர் முருகன், மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story