கும்மிடிப்பூண்டி தாலுகாவில் 109 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா; எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் வழங்கினார்


கும்மிடிப்பூண்டி தாலுகாவில் 109 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா; எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் வழங்கினார்
x

கும்மிடிப்பூண்டி தாலுகாவில் 109 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இதில் பொன்னேரி உதவி கலெக்டர் ஐஸ்வர்யா, கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணைத்தலைவர் மாலதி குணசேகரன், தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள அரியத்துரை, மாதர்பாக்கம், செதில்பாக்கம், புதுகும்மிடிப்பூண்டி, வாணியமல்லி, பூவளை ஆகிய கிராமங்களை சேர்ந்த மொத்தம் 109 பழங்குடியினர் இன குடும்பத்தினருக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டாக்களை எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவி உமா மகேஸ்வரி, கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், பெத்திக்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் ஜீவா, மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story