தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டுமனை


தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டுமனை
x

தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.

கரூர்

வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவேந்திரநகரில் நேற்று ஊரக வளர்ச்சி சார்பில் தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் கவின்மிகு கரூர் திட்டத்தை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களிடம் சேகரித்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக சேகரித்து அதை சரியாக தரம் பிரித்து அதனை தனி இடத்தில் குழி அமைத்து குப்பைகளை அதில் சேகரித்து வைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். சாக்கடைகளிருந்து கழிவுநீர் வழியாமல் இருப்பதற்காக பல்வேறு விதமான உறுஞ்சு குழிகள், குழாய்கள் போன்றவை அமைக்கப்பட்டு அந்தத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும், என்றார்.

முன்னதாக தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் கவின்மிகு கரூர் திட்டத்தின் இலட்சினை வெளியிட்டு, திட்டங்கள் குறித்த செயல் விளக்கத்தினை செய்தி மக்கள் தொடர்புத்துறை அதி நவீன மின்னணு வாகனத்தில் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட மின்கல வாகனத்தின் சேவையை கலெக்டர் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக வெள்ளியணை ஊராட்சியில் 20 தூய்மை காவலர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளையும், 35 தூய்மை காவலர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டையும், 50 பேருக்கு தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.


Next Story