ஊரக சுயவேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி
நாகப்பட்டினம்
நாகை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகை புதிய கடற்கரை சாலையில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், சுயமாக ஓட்டல் நடத்த 40 வகையான உணவு செய்யும் இலவச பயிற்சி இன்று முதல் (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இப்பயிற்சியில், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட மையத்தை தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story