செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்க 2 நாட்கள் சிறப்பு முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்க 2 நாட்கள் சிறப்பு முகாம்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை முகாம் 29, 30-ந்தேதி நடக்கிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் பஸ் பயண அட்டை பெறுவதற்கான முகாம் வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) மற்றும் 30-ந்தேதி வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 வரை பொது மேலாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பொன்னேரிக்கரை காஞ்சீபுரம், அலுவலக பணியாளர்கள் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் முகாம் நடைபெற உள்ளது. பயண அட்டை கோரும் மாற்றுத்திறனாளிகள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை 2 நகல்கள், மருத்துவச்சான்றிதழ் 2 நகல்கள், .ஆதார் அட்டை 2 நகல்கள், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 2 நகல்கள், ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் பயண அட்டை 2 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 4 உடன் பணிக்கு செல்லக்கூடியவர்கள், கல்லூரியில் படிப்பவர்கள், தசைப்பயிற்சிக்காக ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் தங்கள் பணிபுரியும் பயிற்சிபெறும் நிறுவனங்களிடமிருந்து (போனோ பைட் சான்றிதழ்) உரிய சான்றிதழ் பெற்று பயண அட்டை வழங்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story