கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 2 Nov 2023 6:17 AM GMT (Updated: 2 Nov 2023 10:36 AM GMT)

அஞ்சலை அம்மாளுக்கு 'தென்னாட்டின் ஜான்சி ராணி' என்று மகாத்மா காந்தி பட்டம் வழங்கினார்.

சென்னை,

கடலூர் காந்தியம்மாள் பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இவர் தனது வயிற்றில் கருவைச் சுமந்த நிலையில் விடுதலைக்காக போராடி சிறை சென்றவர் ஆவார். அஞ்சலை அம்மாளுக்கு 'தென்னாட்டின் ஜான்சி ராணி' என்று மகாத்மா காந்தி பட்டம் வழங்கினார்.

அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்து இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக அஞ்சலை அம்மாளின் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


Next Story