சலவை தொழிலாளி கொலையில் பழக்கடை தொழிலாளி கைது


சலவை தொழிலாளி கொலையில் பழக்கடை தொழிலாளி கைது
x

ஆரணியில் டாஸ்மாக் கடை முன் நடந்த சலவை தொழிலாளி கொலையில் பழக்கடை தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் டாஸ்மாக் கடை முன் நடந்த சலவை தொழிலாளி கொலையில் பழக்கடை தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஆரணி கொசப்பாளையம் பெரியசாயக்கார தெருவை சேர்ந்த சலவை தொழிலாளி பிரகாஷ் (வயது 50) காந்தி மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை எதிரில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். போதையில் இருந்த அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆரணி நகர போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் இரவு குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவில் மதுபான கடையில் இருக்கும் நபர்கள், அவர்களது செயல்பாடுகள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கிடக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் கடந்த 3-ந்் தேதி இரவு ஆரணியை அடுத்த கணக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தென்றல் அரசு (40) என்பவர் போதையில் பிரகாஷை தலை முடியை பிடித்து தரையில் தலையை இடித்ததில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தென்றல்அரசு கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் அவரை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் வேலூர் மத்திய சிறையில் 15 நாள் காவலில் போலீசார் அடைத்தனர்.


Next Story