கபிலர்மலையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

கபிலர்மலையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல்
கபிலர்மலையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
பரமத்திவேலூர்:
கபிலக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கபிலர்மலையில் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குணவதி முன்னிலை வகித்தார். களப்பணியாளர் வடமலை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நிறுவன இயக்குனர் சரவணன் கலந்து கொண்டு, சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகலா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் களப்பணியாளர் கணேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story






