ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தென்காசியில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

தென்காசி மேல வாலியன் பொத்தையைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் சங்கரநாராயணன் (வயது 24). இவர் மீது தென்காசி போலீஸ் நிலையத்தில் பல்வேறு அடிக்கடி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் ரவுடி பட்டியலிலும் உள்ளார். இவரை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் துரை. ரவிச்சந்திரன், சங்கரநாராயணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சங்கரநாராயணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com