நாளை மறுநாள் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், துறையூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் துறையூர் தாலுகா வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளைமறுநாள் (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொண்டு எரிவாயு சிலிண்டர் வினியோகம் தொடர்பான தங்களது குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story