பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் கைது


பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் கைது
x

பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 30). இவரது பெட்டிக்கடையில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக சாத்தூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது நாகராஜ் பெட்டிக்கடையில் 4 லிட்டர் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து நாகராஜை கைது செய்த போலீசார் 4 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story