ஓடுபாதை அருகே விழுந்த ராட்சத பலூன் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு


ஓடுபாதை அருகே விழுந்த ராட்சத பலூன் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Jan 2024 12:41 PM IST (Updated: 23 Jan 2024 12:49 PM IST)
t-max-icont-min-icon

நேரு ஸ்டேடியத்தில் கட்டப்பட்டிருந்த ராட்சத பலூன் காற்றின் வேகத்தால் பறந்து வந்து விமான நிலைய ஓடுபாதை அருகே விழுந்துள்ளது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுபாதை அருகே ராட்சத பலூன் ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அந்த ராட்சத பலூனை அப்புறப்படுத்தினர்.

'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு சென்னை நேரு ஸ்டேடியத்தில் கட்டப்பட்டிருந்த ராட்சத பலூனின் கயிறு அறுந்த நிலையில், அது காற்றின் வேகத்தால் பறந்து வந்து விமான நிலைய ஓடுபாதை அருகே விழுந்துள்ளது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நேரத்தில் கண்டுபித்து அகற்றியதால், விமானப் பணிகள் எதுவும் தடைப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story