தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை

உளுந்தூர்பேட்டை அருகே தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை
தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை
Published on

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகள் தரணி(வயது 14). இவள் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் தண்ணீர் பிடித்து வர மறுத்த தரணியை அவளுடைய தாய் சிவரஞ்சனி திட்டியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவள் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com