பேராசிரியரிடம் 7½ பவுன் நகை பறிப்பு


பேராசிரியரிடம் 7½ பவுன் நகை பறிப்பு
x

பேராசிரியரிடம் 7½ பவுன் நகை பறிப்பு

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டனை சேர்ந்த குருசரண்.இவரது மனைவி மஞ்சுளா தேவி (வயது 40) இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டின் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம ஆசாமிகள் மஞ்சுளா தேவி அணிந்திருந்த 7½ பவுன் தாலிக்கொடியை பறித்தனர். உடனே மஞ்சுளாதேவி சத்தம் போட்டுள்ளார். மர்ம ஆசாமிகள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளா தேவியின்கையில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து மஞ்சுளாதேவி திருப்பூர் ரூரல் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story