சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
x

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.120 உயர்ந்து ரூ.46,680 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,835-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story