தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு..!


தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு..!
x

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.37 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல வெள்ளி 3.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.70-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது./


Next Story