அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இணை செயலாளர் சேரந்தைய ராஜா, பிற சங்க நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சங்கர், பழனி, ஸ்டீபன், செய்யது யூசுப்கான், பிரகாஷ், ஸ்டேன்லி மற்றும் மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.