அரசு பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டது


அரசு பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டது
x

தினத்தந்தி செய்தி காரணமாக பொதக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

தினத்தந்தி செய்தி காரணமாக பொதக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டது.

சேறும் சகதியுமான விளையாட்டு மைதானம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, பொதக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களின் பயன்பாட்டுக்காக விளையாட்டு மைதானம் உள்ளது. கால்பந்து, கிரிக்கெட், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை இந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் சூழ்ந்து மைதானம் சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

சீரமைப்பு

இதனால், விளையாட்டு மைதானம் மேடு பள்ளமாக காட்சி அளித்ததால் மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. எனவே பள்ளி மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விளையாட்டு மைதானத்தை சீரமைத்தனர். மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.


Next Story