பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார் கவர்னர்


பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார் கவர்னர்
x
தினத்தந்தி 16 Nov 2023 6:56 AM GMT (Updated: 16 Nov 2023 7:02 AM GMT)

தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழக கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக அரசு, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த சுப்ரீம் கோர்ட், கவர்னரின் செயல்பாட்டை விமர்சித்தது.

மேலும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அந்த நோட்டீஸில், 'மக்களின் உரிமைகளை சிதைக்கும் வகையில் கவர்னர் செயல்படுகிறார்' என்ற தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அல்லது அவருக்குப் பதிலாக சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில் கூறியிருந்தது.

இந்த நிலையில், பல ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.


Next Story