கோவைக்கு அரசு பஸ் இயக்கம்
அய்யன்கொல்லியில் இருந்து கோவைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, கோழிச்சால், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இ்ந்த பகுதி பொதுமக்கள் அய்யன்கொல்லியில் இருந்து கோவைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அய்யன்கொல்லியில் இருந்து மதியம் 1.15 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு, அம்பலமூலா, பாட்டவயல், பிதிர்காடு, தேவர்சோலை, கூடலூர் செல்கிறது. அங்கிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு ஊட்டி, மேட்டுப்பாளையம் வழியாக இரவு 9 மணிக்கு கோவை சென்றடைகிறது. பின்னர் கோவையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. மறுநாள் காலை 6.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு அய்யன்கொல்லியை வந்தடைகிறது. கோவைக்கு அரசு பஸ் இயக்கப்படுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த பஸ்சை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.