ஜெக்கேரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
கெலமங்கலம் அருகே ஜெக்கேரி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் ஒன்றியம் ஜெக்கேரி ஊராட்சியில் உள்ள முனிநாதபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராமன், வார்டு உறுப்பினர் தேவராஜ், சின்னட்டி மாதேஸ், ஒன்னுகுறிக்கை சீனிவாஸ், கிராம நிர்வாக அலுவலர் விஜயகாந்த், மக்கள் நல பணியாளர் அன்பு, மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்ட கண்காணிப்பாளர் ஜஸ்டி, பள்ளி ஆசிரியர் ஜெயம்மா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குமார் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட மெயின்ரோட்டில் உள்ள மது கடைகளை அகற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பள்ளி நேரத்துக்கு காலை, மாலையில் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.