பேத்தி இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு


பேத்தி இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் சாவு
x

பேத்தி இறந்த அதிர்ச்சியில் தாத்தாவும் இறந்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கோவிலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அடைக்கலம் மகள் ஹர்ஷினி (வயது 14). இவர், கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஹர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது பேத்தி இறந்த செய்தி கேட்டு மனமுடைந்த நிலையில் இருந்து வந்த ஹர்ஷினியின் தாத்தா சுப்பிரமணியனும் (70) அதிர்ச்சியில் திடீரென நேற்று இரவு இறந்தார். பேத்தி இறந்த துக்கத்தில் தாத்தாவும் இறந்த சம்பவம் கந்தர்வகோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story