வேலை இல்லாத விவசாயிகளுக்கு கருணைதொகை வழங்க வேண்டும்


வேலை இல்லாத விவசாயிகளுக்கு கருணைதொகை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மழைக்காலத்தில் வேலை இல்லாத விவசாயிகளுக்கு கருணைதொகை வழங்க வேண்டும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் ஜீவமணி,மாவட்ட தலைவர் நீதி சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வேலையில் ஒரு நபருக்கு 100 நாள் வேலை வழங்கி வருவதை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். மழைக்காலங்களில் வேலை இல்லாமல் இருந்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் குமார்,இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயசக்திவேல், ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் தமிழ்வேந்தன் நன்றி கூறினார்.


Next Story