பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்


பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 11:33 AM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் மூலம் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க 2-வது சனிக்கிழமை தோறும் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 8 வட்ட வழங்கல் அலுவலகங்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.

நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் சின்னதம்பி தலைமை தாங்கினார். அதில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், செல்போன் எண் மாற்றம் என மொத்தம் 55 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

இதேபோல் சேந்தமங்கலம்-21, ராசிபுரம்-30, கொல்லிமலை-9, திருச்செங்கோடு-23, குமாரபாளையம்-13, பரமத்திவேலூர்-23, மோகனூர்-26 என மாவட்டம் முழுவதும் 200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story