தர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்111 மனுக்கள் மீது உடனடி தீர்வு

தர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்111 மனுக்கள் மீது உடனடி தீர்வு
Published on

தர்மபுரி

தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 111 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோவன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை, குடும்பத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 112 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

உடனடி தீர்வு

இந்த முகாமில் 111 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள ஒரு மனு மட்டும் தொடர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், ராமச்சந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமையொட்டி பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com