புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு 'சீல்'


புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு சீல்
x

புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை மீனவர் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நெய்குப்பை பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ரவி, சின்னமுத்து, இளங்கோவன் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது முருகேசனின் மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், கடையை பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் வழங்கப்பட்ட பதிவு எண்ணை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.

1 More update

Next Story