உடுமலை-மூணாறு சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடக்கும் முன்பு சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published on

தளி

உடுமலை-மூணாறு சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடக்கும் முன்பு சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை-மூணாறு சாலை

உடுமலையில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக சரக்கு மற்றும் வாகன போக்குவரத்தும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைவாழ் குடியிருப்புகளில் வசித்து வருகின்ற மலைவாழ் மக்களுக்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக உள்ளது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு கடந்த சிலநாட்களாக குறிப்பிட்ட இடைவெளியில் சாரல் மலையும் அவ்வப்போது பலத்த மழையும் வனப்பகுதியில் பெய்து வருகின்றது. இதனால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. அத்துடன் உடுமலை-மூணாறு சாலையின் தாழ்வான பகுதிகளில் ஏற்படுகின்ற நீர்வரத்து சாலையில் வழிந்து சென்று அணைப்பகுதியை அடைந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக சாலையின் இரு புறங்களிலும் ஆழமான பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் செல்கின்ற வாகன ஓட்டிகள் விலகிச் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

சீரமைக்க வேண்டும்

மழையால் சாலை ஓரத்தில் பள்ளம் போன்ற ஆழமான அமைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்லும்போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்களை கண்டு அச்சப்பட்டு வேக வேகமாக சாலையை கடக்கும் வனவிலங்குகள் பள்ளத்தில் கால் இடறிவிழுந்து காயம் அடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.மேலும் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கும்போது உதிரி பாகங்கள் பழுதடைந்து விடுகிறது. உடுமலை- மூணாறு சாலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்து உள்ளது.இதனால் பொதுப்பணித்துறையினர் தன்னிச்சையாக செயல்பட்டு மண்அரிப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க முடியவில்லை.

இதனால் உயிர் இழப்புகளும் பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று உடுமலை- மூணாறு சாலையை ஆய்வு செய்து அதன் ஓரங்களில் ஏற்பட்டுள்ள பள்ளம் போன்ற அமைப்புக்கு மண்ணை கொட்டி சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com