கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x

கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு

சென்னை-திருச்சி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூரில் இருந்து பரனுர் சுங்கச்சாவடி வரை 8 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் இரு புறங்களிலும் சாலை அகலப்படுத்தும் பணி முடிந்துள்ளது.

ஆனால் சர்வீஸ் சாலை இன்னும் அமைக்கப்படாததால் 8 வழி சாலையாக அகலப்படுத்தியும், உள்ளூர் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் உள்ளது.

ஆகவே ஜி.எஸ்.டி. சாலையை ஆக்கிரமித்து பலர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. ஏற்கனவே 4 வழி சாலையாக இருந்தபோது கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில், சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது 8 வழி சாலையாக மாற்றியமைக்கப்பட்ட பிறகு சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை எடுத்துள்ளனர்.


Next Story