உயர் கல்விக்கு வழிகாட்டுதல் முகாம்


உயர் கல்விக்கு வழிகாட்டுதல் முகாம்
x

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் முகாமில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் முகாமில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

நான் முதல்வன்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்காத மாணவ- மாணவிகளுக்கு உயர்வுக்கு படி என்ற உயர் கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.

முகாமினை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்து 52 மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி பயில்வதற்கான ஆணையை வழங்கினர்.

123 பேர்

அப்போது அமைச்சர்கள் கூறுகையில், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் 57 சதவீத மாணவ-மாணவிகள் உயர்கல்விக்கு செல்கின்றனர். இந்த உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் விதமாக முதல்-அமைச்சர் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதில் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் மாணவ-மாணவிகள் பல்வேறு உயர் கல்வி வாய்ப்புகளில் சேருவதற்கு வாய்ப்புகள் வழங்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதுவரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகள் 123 பேர் கலந்து கொண்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வழிகாட்டுதல்கள்

இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், அசோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், முதன்மை கல்வி அலுவலர் ராமன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பல்வேறு அரசு துறையினர் மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.


Related Tags :
Next Story