உயர் கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி


உயர் கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
x

அரக்கோணம் வி.ஜி.என். மெட்ரிக் பள்ளியில் உயர் கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பில் அரக்கோணம் டாக்டர் வி.ஜி.என்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'நான் முதல்வன் உயர்வுக்கு படி' என்ற உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து உயர்வுக்கு படி என்ற தலைப்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்க வேண்டும் என்பது குறித்தும், தனித்திறன், நேர்முகத் தேர்வுக்கான பயிற்சிகள் குறித்தும் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர், பள்ளியின் தாளாளர் தனபால் நாயுடு, இணை செயலாளர் துரை நாயுடு மற்றும் உறுப்பினர் முரளி நாயுடு, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் டாக்டர் வ.வனிதா நன்றி கூறினார்.


Next Story