மளிகை கடையில் குட்கா பதுக்கியவர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மளிகை கடையில் குட்கா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
மளிகை கடையில் குட்கா பதுக்கியவர் கைது
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் எல்லைக்குட்பட்ட பண்ருட்டி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பண்ருட்டி பகுதியில் உள்ள மளிகை கடையில் ஆய்வு செய்தனர். அப்போது மூட்டை மூட்டையாக 450 கிலோ குட்கா போதை பொருள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மளிகை கடை நடத்தி வந்த ராஜா (வயது 32), என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெங்களூரு பகுதியில் இருந்து குட்கா பொருட்களை வரவழைத்து பண்ருட்டி, ஒரகடம் பகுதியில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com