பெங்களூருவில் இருந்து கோவைக்குஅரசு விரைவு பஸ்சில் குட்கா கடத்தியவர் கைது

பெங்களூருவில் இருந்து கோவைக்குஅரசு விரைவு பஸ்சில் குட்கா கடத்தியவர் கைது
Published on

 நல்லம்பள்ளி

பெங்களூருவில் இருந்து கோவைக்கு, தமிழக அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே பாளையம் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் வந்தது. அப்போது, டிக்கெட் பரிசோதகர் சண்முகம் திடீரென்று அரசு பஸ்சில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் கேட்டு சோதனை நடத்தினார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகளின் பைகளை அவர் சோதனை செய்தார். அதில் ஒரு பயணி வைத்திருந்த பையில் 20 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கோவை மாவட்டம், செல்லப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்த மோகன் (வயது32) என்பதும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு பஸ்சில் குட்கா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் சண்முகம், மோகனை தொப்பூர் போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com