அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை தயாரிக்கும் பணி தொடக்கம்


அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை தயாரிக்கும் பணி தொடக்கம்
x

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்க 1,00,008 வடை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தி விழாவாக வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டும் வரும் (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது.

இந்த நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்க 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி கோவில் மண்டபத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள் வடைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வடை தயாரிக்கும் பணி 3 நாட்கள் நடைபெறும் என்றும் அதன்பின்னர் வடை மாலை கோர்க்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story