மது விற்றவர் ைகது


மது விற்றவர் ைகது
x

கோத்தகிரி அருகே மது விற்றவர் ைகது செய்யப்பட்டார்.

நீலகிரி

.கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி பகுதியில் மது விலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காமராஜர் சதுக்கம் பஸ் நிறுத்தத்தில் வைத்து ஒருவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கெந்தொரை கிராமத்தை சேர்ந்த லிங்கன் என்பவரது மகன் வினோத் (வயது 42) என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story