டேராடூனில் நடைபெற்ற சுகாதாரத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தமிழக திட்டங்களுக்கு பாராட்டு -அமைச்சர் தகவல்


டேராடூனில் நடைபெற்ற சுகாதாரத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தமிழக திட்டங்களுக்கு பாராட்டு -அமைச்சர் தகவல்
x

டேராடூனில் நடைபெற்ற சுகாதாரத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தமிழக திட்டங்களுக்கு பாராட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

சென்னை,

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற சுகாதாரத்துறை மாநாட்டில் பங்கேற்றது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சுகாதாரத்துறை மந்திரிகள் கூட்டத்தில், நான் உள்பட நமது அதிகாரிகள் பங்கேற்றோம். 2 நாட்களிலும் பல்வேறு தலைப்புகளின் கீழ் அமர்வுகள் நடைபெற்றது. எல்லா அமர்வுகளிலும் தமிழகத்தின் மருத்துவ குறியீடு சிறப்பாக இருப்பதற்கான பாராட்டை பெற்றது. மருத்துவக்கல்லூரிகள், மாணவர்களின் சேர்க்கை விவகாரங்கள், காசநோய்க்கு வாகனங்களில் வீடு தேடி சென்று பரிசோதனை செய்தல், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, இதயம் காப்போம் போன்ற பல்வேறு திட்டங்கள் மிகச்சிறப்பான பாராட்டுதல்களை பெற்றது.

சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம், நான் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்திருக்கிறேன். நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதாக மந்திரி கூறினார். பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் நீட் தேர்வு தேவை இல்லாதது. நீட் தேர்வு வந்ததற்கு பின்னர் மாணவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்று சுகாதாரத்துறை மந்திரிகள் கூட்டத்தில் பதிவு செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story