குன்னூர் இயற்கை காட்சி முனைகளில் கடும் மேகமூட்டம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


குன்னூர் இயற்கை காட்சி முனைகளில் கடும் மேகமூட்டம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x

குன்னூர் இயற்கை காட்சி முனைகளில் கடும் மேகமூட்டம் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. இதனையடுத்து இயற்கை காட்சி முனைகளாக லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் ஆகியவை உள்ளன. லேம்ஸ் ராக் காட்சி முனை குன்னூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் டால்பின்நோஸ் காட்சி முனை 12 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளன.

சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவை கண்டு களித்து விட்டு லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் ஆகிய இயற்கை காட்சி முனைகளை கண்டு ரசித்து செல்கிறார்கள். தற்போது குன்னூர் பகுதியில் தென் மேற்கு பருவ மழையின் தாக்கத்தினால் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

இதனால் குன்னூர் பகுதியை அடிக்கடி மேக மூட்டம் சூழ்ந்து கொள்கிறது. இன்று லேம்ஸ் ராக், டால்பின்நோஸ் ஆகிய இயற்கை காட்சி முன்னகளில் கடும் மேகமூட்டம் இருந்தது. இதனால் இந்த பகுதிகளுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Next Story