மாஞ்சோலை பகுதியில் பலத்த மழை


மாஞ்சோலை பகுதியில் பலத்த மழை
x

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது

திருநெல்வேலி

அம்பை:

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது.

மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை வெகுவாக குறைந்து விட்டது. அணை மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் பெய்து வந்தது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் மழை நீடித்தது. நாலுமுக்கு பகுதியில் பலத்த மழை பெய்தது. ஊத்து பகுதியில் பலத்த மழை பெய்தது. காக்காச்சி பகுதியில் பரவலாக மழை பெய்தது.

மணிமுத்தாறு அணை

குறிப்பாக நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் பெய்தபலத்த மழையின் காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி 34 மில்லிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி மற்றும் ஊத்தில் தலா 15 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

மாஞ்சோலை மலைப்பகுதியில் மழை பெய்தால் மணிமுத்தாறு அருவி அதிக அளவில் வெள்ளம் வருகிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 135 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் பெய்தது. நாங்குநேரியில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.


Next Story