தமிழகத்தில் 11, 12ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் மழை பெய்கிறது
புதுடெல்லி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் மழை பெய்கிறது. சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கை கடல் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தாழ்வு பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 11, 12 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story