தமிழகத்தில் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை,

தமிழகத்தில் வரும் 16 - 17  ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று(14) மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com