கன்னியாகுமரியில் கனமழை; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


கன்னியாகுமரியில் கனமழை; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் பெய்த தொடர் மழையால் திற்பரப்பு அருவியல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து கடந்த 14-ந்தேதி திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டியதால் தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் திற்பரப்பு அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால், திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.



Next Story