சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை: பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை அறிவித்த அதிமுக..!


சென்னையை புரட்டி எடுக்கும் கனமழை: பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை அறிவித்த அதிமுக..!
x

சென்னை மாங்காட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன.

சென்னை,

சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மிக கனமழை பெய்தததால் பல இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன. பழவேற்காடு பகுதியில் மழைநீரில் சிக்கயவர்களை படகுகள் மூலம் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை அதிமுக அறிவித்துள்ளது. சென்னையை 18 பகுதிகளாக பிரித்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுக்கான தகவல் தொடர்பை எளிதாக்குதல், மருத்துவ தேவைகளுக்கு உதவுதல்; மரங்கள் விழுதல், தண்ணீர் தேங்குதல், மின் பிரச்சினைகளுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Next Story