கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்ற கான்கிரீட் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்ற கான்கிரீட் பணியை விவசாயிகள் தடுத்து நிறுத்தினாா்கள்.
ஈரோடு
கடத்தூர்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் பணிகள் எதையும் செய்யக்கூடாது என்று ஒரு தரப்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் கீழ்பவானி வாய்க்காலில் வலது மற்றும் இடது கரையில் இருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் சார்பில், உக்கரம் பகுதி பொறுப்பாளர் ஜனார்த்தனன் தலைமையில் விவசாயிகள் அங்கு திரண்டு சென்று கான்கிரீட் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கல்பனா விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இரவு வரை பேச்சுவார்த்தை நீடித்தது.
Related Tags :
Next Story