நகர்நல அலுவலரை கண்டித்தும், ஆதரித்தும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு


நகர்நல அலுவலரை கண்டித்தும், ஆதரித்தும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு
x

நகர்நல அலுவலரை கண்டித்தும், ஆதரித்தும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்நல அலுவலராக டாக்டர் பாலசுப்பிரமணியன் பணியாற்றி வருகிறார். இவரை கண்டித்து விழுப்புரம் புதிய நகராட்சி அலுவலகம், பழைய நகராட்சி அலுவலகம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்ட துப்புரவு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டிகளில் அனைத்து பணியாளர்களையும் ஆபாசமாக பேசும் நகர்நல அலுவலர் நகர்நல அலுவலர் தானா? சாதி பெயரை சொல்லி திட்டுவது, தொழிலாளர்களை மிரட்டுவது மட்டும்தான் நகர்நல அலுவலரின் பணியா? உடனே அவர் மீது நடவடிக்கை எடுங்கள்... பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் தூய்மைப்பணியாளர்களை போராட்டத்திற்கு தூண்டாதே என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தது.

சில மணி நேரத்தில் அதன் அருகிலேயே நகர்நல அலுவலருக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சமூகநலன் மற்றும் நகராட்சி நிர்வாகம் மீது அக்கறை உள்ளவர்கள் சார்பில் ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டிகளில் சங்கம் என்ற பெயரில் ஒரு சில தூய்மைப்பணியாளர்கள் அன்றாட நகராட்சியின் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளாமல் கண்காணிக்கும் அதிகாரிகளை திட்டுவதும், மிரட்டுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு பொது சுகாதார பணியை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். ஆகவே தமிழக அரசே, இவர்கள் மீது நடவடிக்கை எடு, நகராட்சி நிர்வாகமே நேர்மையாக, சிறப்பாக செயல்படும் மற்றும் பல விருதுகளை அரசிடம் பெற்ற நகர்நல அலுவலரை தொடர்ந்து பொதுமக்களுக்கு பணி செய்ய விடு என்றும் அதில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

விழுப்புரம் நகரில் நகர்நல அலுவலரை கண்டித்தும், ஆதரித்தும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story