வீர, தீரசெயல் புரிந்தவர்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீர, தீரசெயல் புரிந்தவர்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்
வீர, தீரசெயல் புரிந்தவர்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com