தென்காசியில் ரூ.38 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்குகள்
தென்காசியில் 9 இடங்களில் ரூ.38 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தென்காசி
தென்காசியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய பஸ்நிலையம், காந்தி சிலை அருகில், சுவாமி சன்னதி பஜாரில் பூக்கடை பஜார் அருகில், பெரிய பள்ளிவாசல் அருகில், ஆர்.சி. சர்ச் அருகில், கீழப்புலியூர் சாவடி பகுதி, வேம்படி பள்ளிவாசல் அருகில், காட்டுபாவா பள்ளிக்கூடம் அருகில், சுவாமி சன்னதி பஜார் சந்திப்பு பகுதி ஆகிய 9 இடங்களில் ரூ.38 லட்சம் செலவில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான நிதியில் மூன்றில் ஒரு பங்கு தனியாரால் வழங்கப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தென்காசி நகராட்சி தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் சுப்பையா, மாநில பேச்சாளர் வேங்கை சந்திரசேகரன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story