சங்கராபுரம் அருகே உயர் மின்னழுத்தம்


சங்கராபுரம் அருகே உயர் மின்னழுத்தம்
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-04T00:15:23+05:30)

சங்கராபுரம் அருகே உயர் மின்னழுத்தம் 20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள மயிலம்பாறையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 2 மணிக்கு மேல் அப்பகுதியில் திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்களான டிவி., பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின், ஏ.சி., இன்வெர்ட்டர், ஆம்பிளிபயர், கணினி, ஜெராக்ஸ் எந்திரம், மோட்டார், மின் மீட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சத்தத்துடன் எாிந்தன. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் என்னவோ? ஏதோவென்ற பதற்றத்துடன் அலறியத்துக்கொண்டு வெளியே ஓடினர். மேலும் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் எரிந்ததால் அங்கு புகை மூட்டம் ஏற்பட்டது.

பின்னர் விசாரித்தபோது அந்த பகுதியில் திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது தொியவந்தது. சேதம் அடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. உயர் மின் அழுத்தம் காரணமாக சேதம் அடைந்துள்ள பொருட்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story