புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி

புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது.
புனித பனிமய மாதா ஆலய தேர்பவனி
Published on

பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற புனித பனிமய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து விழா நாட்களில் தினமும் மாலையிலும் பல்வேறு திருத்தலங்களின் பங்கு குருக்களால் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக மாலை 6 மணியளவில் முன்னாள் குடந்தை மற்றும் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் பெருவிழா திருப்பலியை பெரம்பலூர் மறை வட்ட முதன்மை குருவும், பங்கு தந்தையுமான ராஜமாணிக்கம் முன்னிலையில் நடத்தினார். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா அன்னையின் சொரூபம் எழுந்தருள செய்யப்பட்டது. இதையடுத்து இரவு 8.30 மணியளவில் ஆலய வளாகத்தில் இருந்து தேர்பவனி தொடங்கியது. முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று மீண்டும் ஆலயத்துக்கு வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com