தேனீக்கள் கடித்து 88 தொழிலாளர்கள் காயம்


தேனீக்கள் கடித்து 88 தொழிலாளர்கள் காயம்
x

நன்னிலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்த போது தேனீக்கள் கடித்து 88 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

திருவாரூர்

நன்னிலம்;

நன்னிலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்த போது தேனீக்கள் கடித்து 88 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

100 நாள் வேலை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நன்னிலம் அருகே உள்ளஆணை குப்பம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ்பணிகள் நடைபெற்று வருகின்றன.நேற்று ஆனைக்குப்பம் அருகே மாவடி வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் ஆனைக்குப்பம், கல்லடிமேடு பகுதியை சேர்ந்த 180 பேர் பணியாற்றினர். அப்போது திடீரென காைல 10 மணி அளவில் அருகில் உள்ள ஒரு புளிய மரத்திலிருந்து தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்து அங்கு வேலை செய்து கொண்டு இருந்தவர்களை கடித்தது.

சிகிச்சை

இதனால் தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு நாலா புறமும் சிதறி ஓடினர். தேனீக்கள் கடித்ததில் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி காயமடைந்து ஆணைக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இதைப்போல கல்லடிமேட்டு பகுதியைச் சேர்ந்த பிச்சையம்மாள் வயது (வயது60), மைலாம்பாள்( 70), லட்சுமி( 55), மற்றொரு லட்சுமி (45), பாப்பாத்தி (60), மீனாட்சி(65), ஜீவா(48) ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தினேஷ் பாபு(32), சத்யா(30), இலன்சியம்(60), அமலா(32), புகழேந்தி( 38), மணிமேகலை(60), திவ்யா(28), அனிதா(32), கனிமொழி(28) ஆகியோர் ஆனைகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதி உள்ளவா்கள்முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தம் தேனீக்கள் கடித்து 88 பேர் காயமடைந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பிரகாஷ் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினா்.


Next Story