வீடு புகுந்து நகைகள் திருட்டு


வீடு புகுந்து நகைகள் திருட்டு
x

வீடு புகுந்து நகைகள் திருடப்பட்டது.

மதுரை

மதுரை மதிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது 55). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 3 பவுன் நகைகள், 135 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story