செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம் 12-ந்தேதி நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதி நாள் முகாம்
Published on

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு நடத்த கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ஜூலை 2023 மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் செய்யூர் வட்டம் நீலமங்கலம் கிராமத்தில் வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com